நங்கவள்ளி ஒன்றியக் கழக கலந்துரையாடல்

அக்.20, 2026 செவ்வாய், நங்கவள்ளி கணக்குப்பட்டி சிவகுமார் இல்லத்தில் ஒன்றியக் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்வரும் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி நங்கவள்ளி, வனவாசி பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மறைந்த தோழர் இலக்கம்பட்டி குமார் அவர்களுக்கு நங்கவள்ளி ஒன்றியக் கிளைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, சிவகுமார் நன்றி கூறக் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது. வனவாசி நகரத் தலைவர் செந்தில், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், நா.குமார், வனவாசி நகரப் பொருளாளர் பன்னீர்செல்வம், சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...