சென்னை கழகச் செயல்வீரர் `எட்வின் நூல் விற்பனை இல்லம்’ திறப்புவிழா!
சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர், கழகச் செயல்வீரர் எட்வின் வேளச்சேரியில் புத்தக விற்பனை நிலையம் தொடங்கியுள்ளார். சுயமரியாதை சமதர்மப் படிப்பகம் மற்றும் எட்வின் புத்தக இல்லம் ஆகியவற்றை அக்-11, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். பெரியாரிய ஆய்வாளர் தஞ்சை பசு. கவுதமன், ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, பேராசிரியர் கனக விநாயகம், எழுத்தாளர்கள் வேலழகன், இனியன் ராம மூர்த்தி, பெரியார் புக்ஸ் மணிகண்டன், ஊடகவியலாளர் பாட்டர், AISCSTBA நிர்வாகி ஆனந்தராஜ், ஓவியர் பரதன், அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
விற்பனை நிலையம் திறப்பின் மகிழ்வாக “புரட்சிப் பெரியார் முழக்கம்” வளர்ச்சிக்கு ரூ. 6,000 வழங்கினார் எட்வின் பிரபாகரன். பதாகைகள், படிப்பகப் பெயர் பலகையை சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண் வடிவமைத்தார்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன், அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, உள்ளிட்ட கழகத் தோழர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026
