வைக்கம் நினைவிடத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் பேரமைப்பின் (National Confederation of OBC Employees Welfare Associations) சார்பில் வைக்கம் பெரியார் நினைவிடத்தில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவு கூறும் விதமாக 17.09.2026 பெரியாரின் 148ஆவது பிறந்த நாளன்று பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் பேரமைப்பின் (National Confederation of OBC Employees Welfare Associations) சார்பில் கொண்டாடப்பட்டது. வைக்கம் வீதிகளில் பெரியார் படத்துடன், கேரள மேளம் முழங்க ஊர்வலமாக கொள்கை முழக்கங்களுடன் தோழர்கள் அணிவகுத்தனர். வைக்கம் பொதுமக்கள் பாராட்டினர்.
பெரியார் நினைவிடத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பாக நூலகம் செயல்பட்டு வருகிறது. பெரியாரின் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்தும் படங்களுடன் கூடிய அருங்காட்சியகமும் நினைவிட அதிகாரி செந்தில் அண்ணா அவர்களின் சீரிய ஒத்துழைப்புடன் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரள அரசின் சார்பில் துணை மாவட்ட ஆட்சியர், வைக்கம் நகர்மன்றத் தலைவர் அப்துல் சலாம் ராவுத்தர், 10க்கும் மேற்பட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பயணம் மற்றும் நிகழ்வினை பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் பேரமைப்பின் பொதுச் செயலாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான அன்பு தனசேகர் ஒருங்கிணைத்தார். பேரமைப்பின் நிர்வாகிகள் சி.சேதுபதி, செல்வம் பெர்னாண்டோ, செந்தாமரைக்கண்ணன், செ.அன்பரசன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
வைக்கம் போராட்டம் நூல் எழுதிய பழ அதியமான், ஒவ்வோர் ஆண்டும் வைக்கம் பயணத்தை முன்னெடுக்கும் தோழர் மதுரை சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
