ஆதித்தமிழர் பேரவை நடத்திய வீரவணக்கப் பேரணி !

திருப்பூர்: 26.09.2026 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் பூங்கா சாலை, எம்ஜிஆர் சிலை அருகில், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு போராளி நெருப்பு தமிழன் “நீலவேந்தன் நினைவு நாளில்” “2009 முதல் 2026 வரை அருந்ததியர் உள்இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை நடத்திய வீரவணக்கப் பேரணியில் கழகப் பொருளாளர் துரைசாமி வீரவணக்க உரையாற்றினார்.

நிகழ்வில் பரிமளராசன் முகநூல் பொறுப்பாளர், மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், முத்து மாநகர அமைப்பாளர், அய்யப்பன் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026

You may also like...