கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகத்தின் சார்பில் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை! அதை உடை!” என்ற முழக்கத்துடன் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது. இப்பயணத்தின் நிறைவு மாநாடு வருகிற ஆகஸ்ட்-12 அன்று காரைக்குடியில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாடுகளைச் செய்யவும், களப்பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் ஆகியோர் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்குடிக்கு வருகை தந்த அவர்கள், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தோழர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

மேலும், பல்வேறு தோழர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழ்களையும் வழங்கினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் (காரைக்குடி) அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நாகர்கோயில் மாநகராட்சியின் மேனாள் மேயர், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயணக்குழுவிற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் தெரிவித்தார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் வழங்கச் சென்றனர். அடிகளார் வெளியூர் பயணத்தில் இருப்பதால், மடத்தின் பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழை வழங்கினர்.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

You may also like...