கண்ணாமூச்சியில் கண்டன ஆர்பாட்டம்!
கண்ணாமூச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து 24-08-2026 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர். ஈசன் முருகசாமி, (நிறுவனர், த.வி.பா. சங்கம்) தலைமை வகித்தார். முத்துச்சாமி (மாநில துணைத் தலைவர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்) முன்னிலை வகித்தார்.
என்.ஆர்.பி.நாகராஜன் (தலைவர், மேட்டூர் அணை உபரிநீர் வேண்டுவோர் மற்றும் விவசாயிகள் முன்னேற்ற நலச்சங்கம்), காவை. ஈசுவரன் தலைமைக் குழு உறுப்பினர், திவிக), சுரேசு (மாவட்ட செயலாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்), டி.எஸ்.பி.இராசேந்திரன் (துணைத் தலைவர், மேட்டூர் அணை உபரிநீர் வேண்டுவோர் மற்றும் விவசாயிகள் முன்னேற்ற நலச்சங்கம்), காவை. இளவரசன் ( கொள்கை பரப்புச் செயலாளர், தமிழக வி.பா. சங்கம்) க. சித்துசாமி (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், திவிக) ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நடராஜ் மூலக்கடை நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
