பெரியார் பிறந்தநாள் விழா; தயாராகிறது சேலம் -நாள் முழுவதும் தொடர் நிகழ்ச்சிகள்!

பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு சேலம் கிழக்கு, மேற்கு, மாநகரத் தோழர்கள் தயாராகி வருகின்றனர்.
சேலம் மேற்கு: மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 31.08.2026 மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

தீர்மானங்கள்: 01.08.2026-ல் மறைந்த கழக மூத்த தோழர் இலக்கம்பட்டி குமார் அவர்களுக்கு சேலம் மாவட்டக் கழகம் சார்பாக புகழ் வணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.

2).எதிர்வரும் செப்டம்பர்-17 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி கோனூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு 17.09.2026 காலை 9.00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது எனவும், சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த நாள் விழா பதாகைகள் வைத்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது எனவும், இருசக்கர வாகனப் பேரணி மூலமாக கிளைக் கழக வாரியாக கோனூர் சமத்துவபுரத்தில் தொடங்கி மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி, பனங்காடு,மேட்டூர் ஆர்.எஸ், மேட்டூர், காவலாண்டியூர், கண்ணாமூச்சி,கொளத்தூர், தார்காடு என 25 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கி, பிரச்சார வாகனத்தில் பறை முழக்கத்துடன் பெரியாரின் கொள்கைகளை மக்களுக்கு பரப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

(குறிப்பு) செப்டம்பர்-17 தந்தை பெரியார் பிறந்தநாள் அன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், மாவட்டப் பொருளாளர் சம்பத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், இளைஞரணி செயலாளர் பிரபாகரன், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவு, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமா சங்கர், இளைஞரணி அமைப்பாளர் சிவ சண்முகம், மேட்டூர் ஆர்.எஸ் பகுதிச் செயலாளர் விவேக், மேட்டூர் பகுதி தோழர்கள் சீனிவாசன், முத்துராஜ், தேவன், வேணுகோபால், ரவி, காளியப்பன், கொளத்தூர் பகுதி தோழர்கள் கணேசன், செந்தமிழ் கலைஅமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு: மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 03.09.2026 வியாழன் மாலை 5.00 மணிக்கு கருப்பூரில், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று, பல்வேறு முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்தனர். கழகத்தின் செயல்பாடுகள், எதிர்காலப் பணிகள், சமூகப் பிரச்சினைகள், மக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து தோழர்கள் தங்களது கருத்துகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், வழக்கமான கூட்டமாக இல்லாமல், ஒரு வகுப்பு போலவும், கருத்துப் பரிமாற்றக் களமாகவும் அமைந்தது. ஒவ்வொரு கருத்தும் கவனமாகக் கேட்கப்பட்டு, அதன்மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. தோழர்களின் கேள்விகள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டதோடு, ஒரு கருத்தை மட்டும் முன்வைத்து முடிப்பதற்குப் பதிலாக, பல்வேறு கோணங்களில் சிந்தித்து விவாதிக்கும் வகையில் கலந்துரையாடல் அமைந்தது.
கழகத்தின் கொள்கைகளையும், பெரியாரிய சிந்தனைகளையும் மக்கள் மத்தியில் மேலும் வலுவாகக் கொண்டு செல்வதற்கான பணிகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பது குறித்தும் தோழர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: எதிர்வரும் செப்டம்பர்-17 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது, தந்தை பெரியார் பிறந்த நாள் பதாகைகள் சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் வைத்து மாலை அணிவித்து, அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. சேலம் மாநகராட்சியில் குடிநீர் தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி நன்றி கூறனார். சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன், சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர்க் கழக மாவட்ட பொறுப்பாளர் கவியரசு, இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ஜெயபிரகாஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், இளங்கோவன், இளம்பிள்ளை சௌந்தர், இளம்பிள்ளை குப்புசாமி, சுதர்சன், கோகுல், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், இளம்பிள்ளை குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகரம்: 06-09-2026 ஞாயிறு காலை 10.00 மணிக்கு பாலமுருகன் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று, பெரியார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்திட தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

காலை உணவு, படத்திறப்பு, வாகனப் பேரணி, தேநீர் விருந்து என பெரியார் பிறந்த நாள் விழா ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு தடையும் இன்றி நடத்துவது குறித்து தோழர்கள் தங்களது கருத்துகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
பெரியார் பிறந்த நாளன்று துண்டறிக்கைகள் வழங்கும் பணியை முன்மொழிந்த சேலம் மாநகரத் தலைவர் பாலு துண்டறிக்கைகளுக்காண முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டார். பிறந்தநாள் விழாவிற்கான செலவினங்களை தோழர்களின் பங்களிப்பைக் கொண்டு நடத்த அனைவராலும் முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம்: எதிர்வரும் செப்டம்பர்-17-2026 தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது, தந்தை பெரியார் பிறந்த நாள் பதாகைகள் சேலம் மாநகரம் முழுவதும் படம் வைத்து மாலை அணிவித்து, அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி நன்றி கூறனார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகரத் தோழர்கள்: செந்தில், அம்பிகாபதி, பாலாஜி,பாலமுருகன், சுதர்சன் வெற்றிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026

You may also like...