ச.குப்பம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் பெரியார் வெங்கட் தாயார் மறைந்த ச. குப்பம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் வெங்கட் இல்லத்தில் ஆக-4, செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணியளவில் மு.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கி.ஆனந்தன், இரா. கார்மேகம், வீ. முருகன், சி. சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் அதிகாரத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ. ஆ. இளையரசன், மாவட்டத் தலைவர் க.மதியழகன், ந. வெற்றிவேல், தபெதிக செ. பிரபு, திராவிடர் கழக சண்முகம், தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறைந்த ச. குப்பம்மாள் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
மா. குமார் நன்றியுரையாற்றினார். வேலூர் மாவட்டச் செயலாளர் இரா. சிவா, குப்பம்மாள் அவர்களின் கணவர் மு.சத்தியமூர்த்தி மகன்களான ச. ஜெயபால், தனபால், ச. ஏழுமலை, மகள் வீரம்மாள் மற்றும் கழக தோழர்கள் இரா. வீரமணி, ஏ. ஜெயப்பிரகாஷ், மு. குமரேசன், தோழர் அன்பு, கு. பாபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் க.ராமர் ஒருங்கிணைத்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026

You may also like...