காரைக்குடி அழைக்கிறது! தோழர்களே தயாராவீர்!

கழகத்தின் பரப்புரைக்கு தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வரும் செய்திகள் வருகின்றன.
ஆணவப் படுகொலைகள் மனித மாண்புகளையும் கொலை செய்கின்றன. ஜாதியை மறுத்து வாழத் துடிக்கும் இளம் பிஞ்சுகளின் உயிரைத் துடிக்கத் துடிக்கப் பறிக்கின்றன. ஜாதிவெறியின் இரத்தப் பசி அடங்கவில்லை.
சமூக ஒருங்கிணைப்பை மானுட ஒற்றுமையை ஜாதி என்னும் நச்சு சீர்குலைக்கிறது. கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் இது தெரியாதா? தெரியும்! ஆனாலும் வாக்கு வங்கி அரசியல் நியாயங்களைப் பேச மறுக்கிறது.
இந்த நிலையில் தான் பெரியார் தந்த ஜாதி எதிர்ப்பு என்ற கொள்கைச் சுடரை ஏந்தி இலட்சியப் பெருமிதத்தோடு கழகத் தோழர்கள் பயணம் புறப்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 12-ல் காரைக்குடியில் நிறைவுவிழா மாநாட்டில் ஒவ்வொரு கழகத் தோழர்களும் கழக ஆதரவாளர்களும் திரளவேண்டும்!. குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காரைக்குடி கருஞ்சட்டை கடலில் மிதக்க வேண்டும்!
கழகத்தின் வலிமையை உணர்த்த வேண்டும்!.
பெரியார் முழக்கம் இதழ் 30072026

You may also like...