பேரறிவாளன், அன்பு தனசேகர் வழக்கறிஞர்களாக பதிவு!
தோழர் பேரறிவாளன் மற்றும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் ஆகியோர் ஏப்ரல்-27 அன்று வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.
மகிழ்வாக, இராயப்பேட்டை பத்ரி நாரயணன் நினைவு படிப்பகத்துக்கு வந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை திவிக, திமுக, விசிக தோழர்கள் வரவேற்றனர்! தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், திமுக வட்டச் செயலாளர் ஆர்.என் துரை, திருவல்லிகேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத, ராஜேஷ், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பிரகாஷ் மாஸ்டர், இனியவன் அசோக், எழுத்தாளர் சரவணக்குமார், ஊடகவியலாளர் கவின் மலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
