கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்: திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருத்துரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, த.மு.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, த.மு.எ.க.ச மாநில பொதுச்செயலாளர் தோழர் களப்பிரன் , நூல் ஆசிரியர் எழுத்தாளர் சூர்யா சேவியர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாரதி புத்தகாலயம் கலியபெருமாள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத் தோழர்கள் டேவிட், கிருஷ்ணன், தங்கதுரை, ஆனந்தி, பிரபாகரன், நாகராஜ், அருள்பாண்டியன், தேவராஜ், சுதர்சன், கவியரசு, கோகுல், பிரேமா, கொங்கனாபுரம் கோகுல், தனசேகர், ஆனந்த், அம்ஜித் கான், நவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...