சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோட்டில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு கழகத் தோழர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், ஏப்ரல்-2 மாலை 4 மணிக்கு, தியாகராய நகர் அமுதம் குடியிருப்பு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பாரி சிவா, குடிஅரசு, சரண் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி, திமுக பகுதிச் செயலாளர் ஏ. ஆர்.எம். காமராஜ் அவர்களின் அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, மயிலை அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக வேட்பாளர்கள் தியாகராய நகர் தொகுதி ராஜா அன்பழகன், ஆயிரம் விளக்கு தொகுதி மருத்துவர் எழிலன், சைதை தொகுதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் மற்றும் தோழர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வடசென்னை: திருவிக நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனை, ஆதரித்து கழக மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தோழர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். 12/04/2026 அன்று எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரசன்னா அவர்களுக்கும் திருவிக நகர் தொகுதி வெற்றி வேட்பாளர் கே. எஸ் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் வாக்கு சேகரிப்பு ஈடுபடும் போது வடசென்னை சார்பாக திராவிட விடுதலைக் கழகம் ந.தஷ்ணாமூர்த்தி, வட சென்னை அமைப்பாளர் மற்றும் சேத்துப்பட்டு ராஜன் வடசென்னை அமைப்பாளர் இவர்கள் தலைமையில் வடசென்னை இளைஞர் அணி தோழர் சஞ்சய் மற்றும் குடியரசு , சேத்துப்பட்டு தமிழ் குமரன், குறள்அரசி ஆகியோரால் பொன்னாடை அணிவித்து புத்தகத்தையும் கொடுத்து ஆதரவளித்தோம்.
மயிலாப்பூர்: ZERO BJP இலக்கை நோக்கி, மயிலாப்பூர் தொகுதியில் ஒரு வார தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து, 9/4/26) மாலை 6 மணிக்கு, திவிக தலைமை அலுவலகத்தில், “மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு 2026” சார்பில், கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்தனர். பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற இந்நிகழ்வில், கழகத்தின் சார்பில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா.வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், ஏசு குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மொடக்குறிச்சி: தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் மதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, ஈரோடு மாவட்டத் தலைவர் செல்வராஜ் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நல்லசிவம் நம்பியூர் வாக்கு சேகரிப்பு பயணத்தில் இராம.இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்) தலைமையில், செல்வக்குமார் (மாவட்ட செயலாளர் ஒருங்கிணைப்பில் ஈரோடு வடக்கு கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: 05-06- 2026 மாலை 5 மணி அளவில் திருப்பூர், அவிநாசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கோகிலாமணி அவர்களின் அறிமுக கூட்டம் சேவூர் சாலை , கொங்கு கலை அரங்கில் நடைபெற்றது. திவிக சார்பாக வேட்பாளர் டாக்டர் கோகிலா மணி அவர்களுக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி வெற்றி பெற வாழ்த்தி புத்தகம் வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் மாவட்ட தலைவர் முகில் ராசு, தெற்கு பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், தோழர்கள் இனியன், பழனி தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளர் (சிபிஅய்) ரவி என்ற மா.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க.வேட்பாளர் கே. என். தினேஷ்குமார் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து திவிகவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர். வேட்பாளர்களுக்கு கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வரவேற்பளித்து பயனாடை அணிவித்து புத்தகங்களை பரிசளித்தனர். வேட்பாளர்களுடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம், சி.பி.அய் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் டிகேடி மு.நாகராஜ் தெற்கு பகுதி கழகச் செயலாளர் நந்தகோபால் திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் தனபால், மாரிமுத்து, மாதவன், ராமசாமி, அய்யப்பன், இனியன், குணா ஆகியோர் பங்கேற்றனர்.
அவினாசி: 13-04-2026 திங்கள் கிழமை மாலை 4.30 மணி அளவில் அவினாசி சட்டமன்ற தொகுதியின் திமுக வெற்றி வேட்பாளர் டாக்டர் கோகிலா மணி அவர்களுக்கு கழக பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் திருப்பூர், கோவை மாவட்டக் கழகம் இணைந்து வாக்கு சேகரித்தது. மாலை 4.30 மணி அளவில் தொடங்கி சேவூர் நான்கு சாலை சந்திப்பு, கைகாட்டி புதூர், ஸ்டேட் பேங்க் எதிரில் ஆட்டையம் பாளையம், அவிநாசி புதிய பேருந்து நிறுத்தம், பெரியாயி பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். கழகப் பொருளாளர் சு. துரைசாமி, கழக சமூக வலைதளப் பொறூப்பாளர் பரிமளராசன், நிர்மல் குமார் (கோவை மாநகரத் தலைவர்), பாரதி சுப்பராயன் (தலைவர், நவீன மனிதர்கள் இயக்கம்), பகுத்தறிவாளர் கழக குமாரராசா தி .க, தமிழ் அமுதன் மார்க்சிய முற்போக்காளர் பேரவை, மாநகர அமைப்பாளர் முத்து, மாவட்ட தலைவர் முகில் ராசு வாகனத்தில் வாக்கு சேகரித்தார்கள். காதர் தமுஎச, அருண் (அமைப்புச் செயலாளர், நவீன மனிதர்கள் இயக்கம்), லெனின் (பொருளாளர், நவீன மனிதர்கள் இயக்கம்), மாரிமுத்து மாநகர துணை தலைவர், அய்யப்பன் வடக்கு ஒன்றிய அமைப்பாளர், குணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேட்டூர்: சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 01.04.2026 மாலை 4.00 மணியளவில் மேட்டூர் (நவப்பட்டி) திருமலை மாதவி மஹாலில் நடைபெற்றது. அங்கு திமுக சார்பில் மிதுன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு மேட்டூர் தொகுதியின் வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி அவர்களின் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்தினார். இந்த கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டக் கழகத் தோழர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக கடந்த 5 நாட்களாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேச்சேரி மேற்கு ஒன்றியம் வெள்ளார் ஊராட்சியில் உள்ள சின்னகம்மம்பட்டி, தம்பியண்ணன் கோவில், கைக்காட்டி வெள்ளார், கோவில் வெள்ளார், எம்.காளிப்பட்டி ஊராட்சியில் மூர்த்திப்பட்டி, குஞ்சாண்டியூர், வீரக்கல்புதூர் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கழக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். இதில் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், தங்கதுரை, சிவசண்முகம், சபரி, பாரப்பட்டி முருகேசன், சுவதரன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், பிரபாகரன், முத்துராஜ், கவியரசு, உமாசங்கர், நாகராஜ், கோகுல், சந்திரசேகரன், பேரறிவாளன், தமிழருவி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 16042026
