பெரியார் முழக்க வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்
புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குறித்து இணைய வழியில் 4.07.2025 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பெரியார் முழக்க தற்போதைய நிதிநிலை பற்றியும், இனிவரும் காலங்களில் சந்தா சேர்ப்பதை வேகப்படுத்துவது பற்றியும், பெரியார் முழக்க வளர்ச்சி நிதி பற்றியும், ஏற்கெனவே 7000 அரசு நூலகங்களில் நமது இதழ் வாங்கிக்கொள்ளலாம் என்ற அரசாணையை நடைமுறைபடுத்துவது பற்றியும் தோழர்கள் தங்களின் கருத்தை முன்வைத்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தலைமைக் குழு உறுப்பினர்கள், கழக மாவட்ட பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 17072025இதழ்
