தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 11-03-2018 அன்று தூத்துக்குடி முத்து மஹாலில் ஒரு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” நடைபெற்றது.

இதில் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும், வகுப்புரிமை வரலாறு பற்றியும், தந்தை பெரியாரின் போராட்ட வரலாறு பற்றியும், தமிழர்- திராவிடர் பற்றிய விளக்கங்களையும், திராவிடர் இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு விளக்கங்களையும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்ட வரலாறு பற்றியும் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விரிவாக பயிற்சியளித்தார். பயிற்சி வகுப்புக்கு பின்னர் கலந்து கொண்ட பயிற்சி யாளர்கள் தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலை மாலை தேநீருடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது. இப்பயிற்ச்சி வகுப்புக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி திவிக மாவட்டச் செயலாளர் இரவி சங்கர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

பெரியார் முழக்கம் 15032018 இதழ்

 

You may also like...