தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவல கத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இரா.உமாபதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத் தார்.
‘நிமிர்வோம்’ ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரையை மய்யப் பொருளாக எடுத்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு தங்கள் கருத்துகளையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினர்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “திராவிடம் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 08032018 இதழ்