நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம் துணைவியார் ம.சுந்தராம்பாள் 7.10.2017 அன்று சனிக்கிழமை காலை 9 மணி யளவில்  முடிவெய்தினார். அவருடைய உடல் மறுநாள் 08.10.17 அன்று எந்த வித மூட சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது. தன்னுடைய கண்களை கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய படத்திறத்திறப்பு நிகழ்வில் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 08032018 இதழ்

You may also like...