சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

காஞ்சிபுரம் – திருவள்ளூரில் புதிய சட்டக் கல்லூரி திறப்பதை காரணம் காட்டி 126 ஆண்டு காலம் பாரம்பரிய மிக்க சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடுவதற்கு முயற்சிக்கும் அரசைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு 03.03.2018 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இராஉமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு கழக ஆதரவை தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 08032018 இதழ்

You may also like...