விநாயகர் சதுர்த்து நிகழ்ச்சியில் நீதிமன்ற,அரசு ஆணைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட கழகம் சார்பில் மனு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்.தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்) அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களுடன் இன்று (18.08.2017) காலை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில்…

வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வினாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.வினாயகர் சிலை தயாரிக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பிளாஸ்டிக் ஆப் போரிஸ், இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வினாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சில மதவாத கும்பல்கள் வினாயகர் ஊர்வலங்களின் மூலம் மதநல்லொழுக்கத்திற்கு எதிராக செயல்படும் செயல்பாடுகளை தடுக்க காவல் ஆணையரை சந்தித்து மனுவை அளித்தனர்.

அதை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை அலுவலகத்திலும், சென்னை மாசுகாட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் மனுவை அளித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

20882110_1995178067432750_1026361958621173697_n

You may also like...