முனைவர் பொன்னியின் செல்வம் சந்திப்பு.

26-7-2015 அன்று காலை 11 மணியளவில், பெரியாரியல் சிந்தனையாளரும், அழுத்தமான திராவிட இயக்கப் பற்றாளரும், ஏரளமான விருதுகள், பரிசுகள் பெற்ற சிறந்த பாவலருமான முனைவர் பொன்னியின் செல்வன் அவர்களை தஞ்சாவூர், அம்மன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். குடிஅரசு இதழின் உள்ளடக்க தொகுப்பு பற்றியும், அவரது இலக்கியப் பணிகள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினர். அவருடன் பெரியாரியல் சிந்தனையாளர்கள் தஞ்சை பசு.கவுதமன், குப்பு.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

முனைவர் பொன்னியின் செல்வன் அவர்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ இதழின் 2-5-1925 இதழில் இருந்து இறுதி இதழான 5-11-1949 வரையிலான அனைத்து இதழ்களிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள், அதன் ஆசிரியர், வந்துள்ள பக்கம், என்ன செய்தி குறித்து என்ற விவரங்களை நான்காண்டு காலம் கடுமையாக உழைத்து தொகுத்த பெரும்பணியைச் செய்த மாண்பாளர் ஆவார்.
dvk1dvk2

You may also like...

Leave a Reply