Tagged: மக்கள் கவிஞர் இன்குலாப்

என் பெயர் மருதாயி – கவிஞர் இன்குலாப்

ஆன்ற தமிழ்ச் சான்றோரே தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி கம்பராமாயணம் பெரிய புராணம் மறந்துவிட்டேன் திருக்குறள் எல்லாவற்றாலும் சுட்டப்பட்டவள் நான் தாய்மொழி -தமிழ் பெயர் -மருதாயி தொழில் பரத்தை என்னைக் கடமைகள் எனலாம் மதுரையைக் கொளுத்திய கற்பரசியே தலையாய கற்பினள் அல்லன் உங்கள் முத்தமிழ் அளவுகோலில் கற்புத் தோன்றிய அன்றே நானும் தோன்றி விட்டேன் ஐயா ஆன்ற தமிழ்ச் சான்றோரே என்னிடம் முதலில் வந்தவன் உங்கள் கொள்ளுப்பாட்டன் இப்போது வந்துபோனவன் கொள்ளுப் பேரன் என்றாலும் பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம் ‘பெய்யெனப் பெய்ய’ தன் சடலம் எரியும்போது உடல் வேக பாட்டி ஒருபோதும் பாட்டனிடம் கேட்கவில்லை     பெய்யெனச் சொல்க உடல் வேக இருக்கையிலே சில சமயங்களிலும் போகையிலே சிலசமயங்களிலும் பாட்டி தன் தங்கையைத் தாரமாக்குபவள் இல்லாவிடினும் இவன் மேய்வான் பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு மச்சினியை கைப்பிடித்த ஆறுதல் இல்லத்தரசி இருக்க என்னிட ம்  ...

மக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்

மக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்

மக்கள் கவிஞர் இன்குலாப் (73) டிசம்பர் முதல் தேதி சென்னையில் முடிவெய்திவிட்டார். சமரசத்துக்கு இடமில்லாத கவிஞர். அவரது கவிதைகள் மக்களுக்காகவே பேசின. சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியர். ஆனாலும் கவிஞராக, போராளியாக, நாடக ஆசிரியராக  அவரது அடையாளங்கள் விரிந்து நின்றன. மார்க்சிய லெனினியத்திலும் பெரியாரி யத்திலும் அவர் ஈர்க்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இன்குலாப் இல்லாமல் பெரியார் திராவிடர் கழக மேடைகள் இல்லை என்ற அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். 17.9.2000ஆம் ஆண்டு சென்னை இராயப் பேட்டை சைவ முத்தையா முதலி 5ஆவது வீதியில்  பெரியார் திராவிடர் கழகத்துக்கான தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தவர் கவிஞர் இன்குலாப். விளம்பர வெளிச்சங்களி லிருந்து ஒதுங்கி நின்ற உண்மையான மனிதர். தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதையும் ஒரு இலட்சம் ரூபாயையும் தமிழக அரசுக்கு திருப்பி...