Tagged: தளி ராமச்சந்திரன்

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்!  ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்! ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

4-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தலைவர் குமார், மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப் பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத் தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, பொதுவுடமைக் கட்சிக்கு  இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார். பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன்,...

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தளி பகுதியில் கடும் குற்றப் பின்னணிகளோடு சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு, குவாரி கொள்ளைகளை நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் என்பவரை எதிர்த்து, மக்கள் உரிமைக்காகப் போராடியதற்காக பழனி படுகொலைக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தளி இராமச்சந்திரன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி விட்டார். கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளி’ தொகுதி வேட்பாளராக இராமச்சந்திரனை அக்கட்சி நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் ஆதரிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ‘தளி’ தொகுதியில் மட்டும் அக்கட்சி தனது வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்திய...

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

தளி தொகுதியில் போட்டி யிடும் குற்றப் பின்னணி கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் இராமச்சந்திரன் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் ‘தினமலர்’ நாளிதழுக்கு (ஏப்.28) அளித்துள்ள பேட்டி இது: கேள்வி: ‘ஊழலற்ற ஆட்சி; நேர்மையான நிர்வாகம்’ என பிரச்சாரம் செய்யும் நீங்கள், கிரானைட் முறைகேடு மற்றும் கொலை வழக்கில் சிக்கி உள்ள எம்.எல்.ஏ., தளி இராமச்சந்திரனை மீண்டும் வேட்பாள ராக்கியது ஏன்? பதில்: தளி இராமச் சந்திரன் மீதான புகார்கள் குறித்து, கட்சி யின் மாநிலக் குழு தீவிர விசாரணை நடத்தியது. அவர் மீதான புகார்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் செய்யப்பட்டவை என தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற விசாரணை யில் உள்ள நிலையில், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து, அவரை ஒதுக்கி வைக்க முடியாது. அவர் எம்.எல்.ஏ. ஆன பின், கிரானைட் தொழிலை செய்ய வில்லை. கிரானைட் தொழிலை, இராமச் சந்திரன் குடும்பத்தினர், நீண்டகாலமாக செய்து...

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி யுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட்  கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சம்ஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி: தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப்...