‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்!
பார்ப்பனியம் சமூகத்தில் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. “பெற்றோர்களும் தாங்களாகவே முன் வந்து திருமண வயதை உயர்த்த உறுதி ஏற்கவேண்டும்” என்று, பூனா பார்ப்பனரும், ‘சீர்திருத்தவாதி’யுமான ராணடே வேண்டுகோள் விடுத்தார். இந்து தர்ம சாஸ்திரங்களில் அதற்கு இடமில்லை என்று சங்கராச்சாரிகளும் வைதீகப் பார்ப்பனர்களும் மறுத்து விட்டனர். திருமண வயதை உயர்த்தி சட்டம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரிட்டிஷ் ஆட்சி முயற்சித்தபோது சுதந்திரப் போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்ட மராட்டிய பார்ப்பனர் திலகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “நமது சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்தும் வேலையில் அரசாங்கம் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தான் நடத்தி வந்த ‘மராட்டா’ பத்திரிகையில் எழுதினார். அப்போது குஜராத்தைச்...