Tagged: பொழிலன்

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்

ஆர்.எஸ்.எஸ். எதற்காக – ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற அறிக்கையில் ஹெட்கேவர் கூறுகிறார்: “மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தின் விளைவாக நாட்டில் தேசியத்துக்கு ஆதரவு குறைந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தினால் தோற்று விக்கப்பட்ட சமூகத் தீமைகள் ஆபத்தான முறையில் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றன. தேசியப் போராட்ட வெள்ளம் வடிந்தவுடன் பரஸ்பர விரோதங்களும் பொறாமைகளும் மேற்பரப்புக்கு வந்துள்ளன. வெவ்வேறு சமூகங்களுக் கிடையே சண்டைகள் ஆரம்பமாயின. பிராமணர்-பிராமண ரல்லாதார் சண்டை மிக வெளிப்படையாக நடைபெற்றது. எந்த ஸ்தாபனமும் ஒற்றுமையாக இல்லை. ஒத்துழையாமைப் பாலை குடித்து வளர்ந்த இசுலாமியப் பாம்புகள் தமது விஷ மூச்சினால் கலகங்களைத் தூண்டின.” சோதிராவ் புலே 1870இல் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகிய – உண்மை நாடுவோர் சங்கமும், 1920ஆம் ஆண்டு முதல் மராட்டியத்தில் மேதை அம்பேத்கர் உருவாக்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கமும் வலிமையாக இருந்ததையும், இசுலாமியர் தங்களுக்குரிய பங்கைக் கேட்பதையும்தான் ஹெட்கேவர் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெட்கேவருக்குப் பின்...