சவால் விட்ட பூரி சங்கராச்சாரியை ஓட வைத்த அக்னிவேஷ்
கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிக்கும் ‘சதி’ எனும் உடன் கட்டை ஏறும் கொடுமை, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ரூத்கன்வர் என்ற பெண் உடன்கட்டை ஏறினார். உடனே பார்ப்பனர்கள் அந்தப்பெண்ணுக்கு கோயில் கட்டி ‘சதி மாதா’ என்று வழிபட ஆரம்பித்தார்கள். சங்பரிவார்களும் இதை ஆதரித்தன. பா.ஜ.க.வின் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங், சதி மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பூரி சங்கராச்சாரியான பார்ப்பனர் நிரஞ்சோ தீர்த் என்பவர், அப்போது உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தி பேசி வந்தார். இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடுப்புச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து வந்தார். இந்த சட்டத்தின்படி உடன் கட்டையை ஆதரித்துப் பேசுவதும் குற்றம். சங்கராச்சாரி அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில் சங்கராச்சாரி மீரத் நகரில் உடன்கட்டை ஏறுவதை ஆதரித்துப் பேசவும் யாகம் நடத்தவும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து வடநாட்டில் சமூக நீதியை தீவிரமாக ஆதரிப்பவரும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வலம்...