சோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை!
பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கை களிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து. ஜோதிடம் ஓர்அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு – ஜோதிடருக்கு – ‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே’ என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. எனினும் பலரது நெஞ்சங்களிலும் எழுகிற ஒரு கேள்வி என்னவென்றால் ‘கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு தானே சோதிடம் கணிக்கிறார்கள். நாம் வாழுகிற இந்த பிரபஞ்சத்தில்தானே கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அவற்றின் நிலை மாற்றங்கள் மனிதனை பாதிக்காதா?’ என்பதாகும். இது சற்று விரிவாக விசாரணை நடத்த வேண்டிய விஷயம். முதலில் கிரகங்கள் குறித்து இந்த ஜோதிட வித்வான்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்போம். ‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின்...