கடந்து வந்த புரட்சிப் பாதை!
கியூபா மக்களை யும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ, 90ஆவது வயதில் காலமான செய்தி, சமத்துவம்- சுதந்திரத்தை விரும்பும் உலக மக்களின் இதயத்தில் இடியாக இறங்கியது. பொருளாதார சமத்துவத்தையும் ஏழைகள் இல்லா கியூபாவையும் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றிட அயராது உழைத்த காஸ்ட்ரோவின் மூச்சு நின்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்ல… உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது உயர்கல்வியை முடித்திருந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசத்தின்மேல் அளவற்ற காதல் ஏற்பட்டது. ஹவானா பல்கலைக்கழகம்தான் காஸ்ட்ரோவின் இதயத்தையும் மனதையும் திறந்து அவரை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆக்கியது. அதே பல்கலைக் கழகத்தில் ஒரு சில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்படும்போது, வேறு சிலரோ சுகபோகத்தில் திளைத்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக் குறித்து அப்போதைய அதிபரான பாடிஸ்டாவிடம் அவர்...