ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?
இந்தியாவின் தலைநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அரசு அதிகாரத் திமிருடன் மதவாதம் படை எடுக்கிறது. மாணவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கடந்த பிப்.9 ஆம் தேதி இந்தியாவின் ஆளும் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் முறைகேடாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளில் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும் இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் காஷ்மீர் மக்களுக்காகவும் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அவ்வளவுதான். மாணவர் தலைவர் கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் மீது ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்தது. கன்யாகுமார் என்ற புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வந்த இளைஞர். கன்யாகுமார் பிணையில் வெளிவந்த பிறகும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாணவர்களை விட்டு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை, பல்கலைக்கழகங்களில் ‘இந்துத்துவா’ வுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று மோடி ஆட்சிக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் வெளிப் படையாகவே எச்சரித்தார். மாணவர்களைப்...