தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை
வழக்கு : உயர்நீதிமன்றம் கெடு மதவெறியர்களால் குறிவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவழக்குகளில் தடயவியல் ஆய்வுக்கான அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து 8 வாரங்களுக்குள்ளாக பெற்று நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று புனே நகரில் நடைப் பயிற்சியின்போது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பின் நிறுவனரும் பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை முறையாக செயல்பட்டு புலனாய்வு விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறியவில்லை எனக் கூறி, 2014ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தபோல்கர் சுடப்பட்டதைப்போலவே, மகாராட்டிர மாநிலத்தில் மும்பை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைப் பயிற்சியின்போது சுடப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோன்றே கருநாடக மாநிலத்தில் 30.8.2015 அன்று ஹம்பி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், பேராசிரியரும் பகுத்தறிவாளருமாகிய எம்.எம்.கல்புர்கி, கருநாடக மாநிலத்தில் மைசூரு தார்வார்ட்...