ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (2) தமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள் அருட்தந்தை ஆ. குழந்தை
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) சமயம் இலங்கையில் பௌத்தம், கிறித்தவம், இந்து. இசுலாம் போன்ற மதங்கள் இருந்தா லும் பௌத்தம் ஆட்சி செலுத்துகிறது. இதனால் எல்லா சமய தலைவர்களும் இலங்கை பௌத்த நாடு அல்லது சமயம்சார்ந்த நாடு என்று கூறுகின்றனர். இதனால் பௌத்த சமயத்தின் பெயரில் புத்தர் விகார்களை(சிலைகளை)தமிழர் பகுதிகளில் அதிகமாக நிறுவுகின்றனர். இரணைமடு அம்பகாமம் என்ற இடத்தில் உள்ள கனக சொக்கலிங்க நாதர் கோவிலுக்கு அருகில் புத்தர் சிலையை வைத்தனர். இதனால் நான்கு குளங்களையும் 8,000 ஏக்கர் நிலங்களை இராணுவத்தின் உதவியால் சமயம் கட்டுப் படுத்துகின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரர் கோவில் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை புத்தர்...