ராமராஜ்யத்துக்கு அரசியல் சட்டமே கூடாது –- சங்கராச்சாரி கூறுகிறார்!

அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, அது ராமராஜ்ஜியத்துக்கு எதிரானது என்றார் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
“ராமராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களின் வாரிசுகள் ஜனநாயகம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து (அதாவது சட்டங்களை உருவாக்கி) ராஜ்ய பாரம் நடத்தவில்லை தன் அபிப்பிராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து அப்படியே பண்ணினவர் ஒருவர் உண்டு என்றால் அது ராமச்சந்திர மூர்த்தி தான். மநு தர்மத்தை காலம் முதலாக தசரத சக்கரவர்த்தி வரை எந்த தர்ம சாஸ்திர ஆட்சி நடந்ததோ அதையே தான் ராமரும் நடத்திக்காட்டினார் என்று சங்கராச்சாரி கூறியதோடு பாமர மக்களுக்கு உரிமைகளை வழங்கினால் மோசடிகள் – ஏமாற்றுகள் தொடங்கிவிடும் என்றார். இது குறித்து அவர் கூறியது.
“ஏராளமான பாமர ஜனங்களை நேராக ராஜ்ய விசயங்களில் கொண்டுவருவதில் அநேக தப்புத்தண்டாக்கள், ஏமாற்று மோசடிகள் நடந்துவிடலாம் என்ற கருத்தை அலட்சியம் செய்வதற்கு இல்லை. (தெய்வத்தின் குரல் 4ஆம் பகுதி)
ராமராஜ்யம் என்ற பார்ப்பனிய ஆட்சிக்கு அரசியல் சட்டங்களே கூடாது. மனு உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்களே சட்டங்கள் என்ற சங்கராச்சாரி கருத்தைத்தான் பாஜக ஆட்சி ஏற்று அரசியல் சட்டங்களின் உள்ளடக்கங்களை சீர்குலைத்து வருகிறது.

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

You may also like...