பரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி

கான்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவரது வாரிசாக தலைவராகியிருக்கும் மாயாவதி, வாக்கு வங்கி அரசியலுக்காக கான்ஷிராம் கொள்கைகளையே குழி தோண்டி புதைத்து வருகிறார்.

சங் பரிவாரங்கள் இராமன் கோயில் கட்டும் இயக்கத்தைத் தொடங்கியபோது கான்ஷிராம் அதற்கு எதிர்நிலைப்பாடு ஒன்றை எடுத்தார். சம்பூகன், ஏகலைவன் போன்ற விளிம்பு நிலை புராண நாயகர்களை வெகுமக்களின் அடையாளமாக்கி இயக்கம் நடத்தினார்.

இப்போது மாயாவதி, இராமன் கோயில் கட்டும் கட்சிகளுக்கு மாற்றாக, பார்ப்பன அவதாரமாகப் பேசப்படும் ‘பரசுராமனை’ தலையில் தூக்கி சுமக்கிறார். ஷத்திரியர்களை ஒழிப்பதற்காகவே பார்ப்பன பரசுராமன் அவதாரம் எடுத்ததாகவும் தனது கோடரியால் சத்திரியர்களை ‘பூண்டோடு’ ஒழித்ததாகவும் புராணங்கள் கதை விடுகின்றன. மாயாவதி 70 அடி உயரத்தில் அந்த பரசுராமனுக்கு சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியும் தன் பங்கிற்கு மாவட்டந்தோறும் பரசுராமன் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்குப் போட்டியாக மாயாவதி வெளியிட்ட அறிவிப்பு இது?

கான்ஷிராம் – பகுஜன் சமாஜ் கட்சிக்கு தந்த அடையாளங்களை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறார், மாயாவதி.

பெரியார் முழக்கம் 08102020 இதழ்

You may also like...