ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது

#திவிக_தோழர்_ஆனைமலை_சிவா_கைது

தோழர்ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம்
அவரின் வீட்டின் அருகிலுள்ள கறையான் புற்றில்
மக்கள் வழிபாடு செய்வது வழக்கம்
அதனை இடித்து விட்டதாக பொய்யான வழக்கு.

கொரானாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடாது என்று அரசு
அறிவித்து இருக்கும் வேலையில்
மக்கள் கூட்டம் அதிகரிப்பதை கண்டு
நாம் சொன்னால் தவறாக போய்விடும் என்று காவல்துறை, வருவாய் துறைக்கு
தகவல் கொடுத்து உள்ளார்.
அந்த துறையினரும்
அந்த இடத்திற்கு வந்து மக்களை கண்டித்தும் அறிவுரையும் வழங்கி உள்ளனர்.
கடந்த 10. 7. 2020 அன்று இரவு
இந்து அமைப்பை சேர்ந்தவர்கள்
மது போதையில்
தோழர் சிவா வீட்டின் அருகில் வந்து நின்று கொண்டு காவல்துறைக்கும்
ஆர் ஐ .க்கு தகவல் சொன்னவன் யார் என்று எங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் வெளியே வா என்று
கடுமையான கெட்ட வார்த்தைகள் மூலம் திட்டி உள்ளனர். இதை எதிர்த்து கேட்ட தோழர் சிவாவை தாக்க முயன்று உள்ளனர்.
உடனடியாக சிவா தோழர் அரிதாஸ்
அவர்களை அழைத்து நிலைமையை
தெரிவித்து உள்ளார்.
அரிதாஸ் அவர்கள் காவல்துறை உதவியுடன் அவர் வீட்டிற்கு சென்று அந்த இடத்தில் இருந்து சிவாவை அழைத்து வந்து உள்ளார்.
காலை 10மணிக்கு காவல்நிலையத்திற்கு வரசொல்லி விட்டு காவல் ஆய்வாளர் சென்று விட்டார்.
காலை 10 மணிக்கு காவல் நிலையம் செல்லலாம் இருந்த வேலையில்
குற்றவாளியாக சிவாவை உறுதி செய்து
கைது செய்யவும் முடிவும் செய்து விட்டதாக தகவல்கள் கிடைத்தன.
தோழர்களுடன்
இன்று நேரில் சென்று
இந்த சம்பங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் கொடுத்தோம். புகாரை வாங்கி வைத்து கொண்டு சிவாவை சிறைக்கு அனுப்பி உள்ளது காவல்துறை.
ஒன்று அல்லது இரண்டு நாள் பார்ப்போம்.
புகாரின் மீது நடவடிக்கைகள் இல்லை
என்றால்

போராட்டத்தை தொடங்குவோம்.

-தோழர் வெள்ளிங்கிரி,
கோவை மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...