காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் – இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்:

‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple) என்று காந்தி தனது சுயசரிதையில் கூறுகிறார்.

 

தகவல்களுக்கு ஆதாரம் :

பேராசிரியர் ரிஷிகாந்த் – திரிபுரா பல்கலையில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை.

‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’,

ஏப்.1, 2017

பெரியார் முழக்கம் 10102019 இதழ்

You may also like...