கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழரும் முன்னாள் சுங்கத்துறை கண்காணிப்பு அதிகாரியுமான குகானந்தம் (குகன்) தாயார் ஜெயம்மாள் (86) – மே 27 அன்று முடிவெய்தினார். நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து இறுதி மரியாதைச் செலுத்தினர்.

கழகத் தோழர்களின் இறுதி வணக்க முழக்கங்களோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டு மீனம்பாக்கம் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 31052018 இதழ்

You may also like...