‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் புனித பாண்டியன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் 4ஆவது சந்திப்பு ஏப்ரல் 30, 2018 அன்று மாலை 6 மணிக்கு விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் முடிவெய்திய ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் படத்தை விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ‘நிமிர்வோம்’ ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளைக் குறித்து தங்களது பார்வைகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், மதன்குமார், துரை, அருண், கார்த்திக், இராசேந்திரன் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம் என்ற தலைப்பில் புனித பாண்டியன் (‘தலித் முரசு’ ஆசிரியர்) சிறப்புரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கட்டுரைகளைக் குறித்து தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறினார். இதில் 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 10052018 இதழ்

You may also like...