‘நிமிர்வோம்’ கவிஞர் தாரை வடிவேலன், தாரமங்கலம்

  1. சாதிமுறைக் கல்யாணம் சாய்த்திடுக ஆணோடு

பாதி எனநின்ற பெண்ணோடு – நீதி

நயந்தே சுதந்திரத்தை நல்கிடுக போற்றிச்

சுயமரியா தையாய் நிமிர்.

  1. அந்தணர்க்கு நீயடிமை அல்லவென நின்றிடுக

வந்தமொழி ஓட்டிடுக வண்டமிழை – வந்தனைசெய்

அயல் மொழிக்(கு) ஆட்பட்(டு) அடிமையாய் நில்லாச்

சுயமரியா தையாய் நிமிர்.

  1. கடவுளில்லை என்றுபெரி யார்சொன்ன காரணத்தை

நடைமுறையில் வைத்துப்பார் நன்றே – மடமை

பயக்கும் இடமாகக் கோவிலை நீக்கி

சுயமரியா தையாய் நிமிர்.

  1. சூத்திரராய் நம்மைவைத்துச் சோதரரில் சாதிவைத்த

ஆத்தியத்தில் நம்பெரியார் அந்திமகா லத்தும்

அயர்ச்சி சிறிதுமின்றி ஆற்றினார் தொண்டு

சுயமரியா தையாய் நிமிர்.

 

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...