குமரி மாவட்டத்தில் கழக செயல்பாடுகள்

பெரியாரின் 38 ஆவது நினைவு நாளை யொட்டி கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பில் நாகர்கோவில் ஒழுகின சேரியிலுள்ள பெரியார் உருவ சிலைக்கு வழக் கறிஞர் வே.சதா தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இந்நிகழ்வில் தோழர்கள் கோட்டாறு சூசை, சுரேஷ், விஜய், கணபதி, ஜெபகுமார், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், லால், பிரான்சிஸ், தலித் மக்கள் உரிமைகள் அறக்கட்டளை மாநில தலைவர் நீதி அரசர், வினீஸ் ஜெகன், பக்தசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

13.1.2012 அன்று கோட்டாரில் குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமைசெயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால் பிரபாகரன் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் வே.சதா, கோட்டார் சூசை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.சேவியர் மார்த்தாண்டம், நீதியரசர் பக்தசீலன், பிலிஸ்து, சூசையப்பா, விஜய், கணபதி சுரேஷ், சுபாஷ், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத்தலைவர் – ஜா.சூசை; மாவட்ட துணைத் தலைவர் – அ.சேவியர்; மாவட்ட செயலாளர் – வழக்குரைஞர் வே.சதா; மாவட்ட துணைச் செயலாளர் – சுபாஷ்; மாவட்ட பொருளாளர் – விஜய்.  நாகர்கோவில் நகரப் பொறுப்பாளர்கள்: நகர தலைவர் – சுபாஷ்; துணைத் தலைவர் – சுரேஷ்; செயலாளர் – விஜய்; துணைச் செயலாளர் – விசு. கன்னியாகுமரி பொறுப்பாளராக – பிலிஸ்து;  மார்த்தாண்டம் பொறுப் பாளராக – லால்; திருவட்டார் பொறுப்பாளராக – அ.சேவியர்; ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிரான இந்திய தேசியத்தின் துரோகங்கள் 1. ஈழத்தில், 2. கூடங் குளத்தில்  3. முல்லை பெரியாறில் எனும் தலைப்பில் மாவட்டம் முழுமையும் ஆங்காங்கே தெருமுனைக் கூட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. கழக ஏடான பெரியார் முழக்க ஏட்டிற்கு சந்தா சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. தோழர் சேவியர் நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 26012012 இதழ்

You may also like...