முல்லைப் பெரியாறு உரிமை: மலையாளிகள் ஆதிக்கத்தை விளக்கி கழக மாணவரணி பரப்புரைப் பயணம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு தமிழர் உரிமை பரப்புரைப் பயணம் நடைபெற்று வருகிறது.

2012 சனவரி 7 சனி மாலை 6 மணிக்கு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் தலைமை யில் பயணம் தொடங்கியது. கோவை மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு சிறப்புரை யாற்றினார். நடராஜ் மருத்துவமனை, கா.க.சாவடி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பரப்புரையில் ம.தி.மு.க. சார்பில் மணி, டில்லிபாபு, கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் பாலமுரளி, பிரதாப், நாகராசு, விக்னேசு, சிலம்பரசன், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சனவரி 8 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைப் பெரியாறு பற்றிய செய்திகளை மாணவர்கள் சிலம்பரசன், வெ. பிரபாக ரன் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதை யடுத்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் வெள்ள மடை நாகராசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, திருப்பூர் மாநகர செயலாளர் முகில்ராசு, திருப்பூர் இராவணன் ஆகியோர் உரையாற்றினர். பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து வீரபாண்டி பிரிவில் பரப்புரை நடைபெற்றது. பரப்புரையில் பெரியார் தி.க. நகரச் செயலாளர் வீரபாண்டி பாபு, தி.மு.க. கணேசமூர்த்தி, ம.தி.மு.க. அய்யாசாமி, கோவிந்தராசு ஆகியோருடன் மாணவர்கள் சிலம்பரசன், பிரதாப், நாகராசு, சிலம்பரசன், விக்னேசு, ஜெய்ந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சனவரி 9 ஆம் நாள் துடியலூர் பகுதியில் நடை பெற்ற பரப்புரையில் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவை மாவட்ட அமைப் பாளர் நேருதாசு, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், மாணவர்கள் பிரதாப், சிலம்பரசன், சிலம்பரசன், விக்னேசு, சரவணன், ஆண்ட்ரோசு, சதீஷ், ஜெயந்த், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் வழக்கு நிதி வழங்கப்பட்டது.

சனவரி 10 அன்று சூலூர், ஆர்.வி.எஸ். கல்லூரி , பேருந்து நிலையம், பாப்பம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது.கோவை மாவட்டச் செயலாளர்கள் கா.சு. நாகராசன், வெள்ள மடை நாகராசு, சூலூர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் கலங்கல்வேலு, பொருளாளர் குமாரவேலு, ம.தி.மு.க. கருணாநிதி, சிலம்பரசன், பிரதாப், சதீஷ், பிரபாகரன் ஜெய்ந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனவரி 12 மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத் தில் இராமச்சந்திரன் பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தோழர்கள் வெள்ளமடை நாகராசன், பன்னீர்செல்வம், மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் உரை யாற்றினர். மேட்டுப்பாளையம் பரப்புரையின்போது பொது மக்கள் கூட்டமாக நின்று கேட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவிந்தராஜன், சிறுத்தை சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சனவரி 13 – காரமடையில் பரப்புரை நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கோவை. இராமகிருட்டிணன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசன், மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுப.தங்கவேல் (சி.பி.ஐ.), வெங்கடேசு, தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சனவரி 17 – அன்னூர் பகுதியில் பரப்புரை நடை பெற்றது. வெள்ளமடை நாகராசு , பன்னீர்செல்வம் உரையாற்றினர். அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்விழி குமார், விடுதலை சிறுத்தைகள் நகர அமைப்பாளர் பாலுமகேந்திரன், நகரச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ராமன், பழனிச்சாமி, பிரபாகர், ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக வழக்கு நிதி வசூலிக்கப்பட்டது.

பரப்புரையின்போது முல்லைப் பெரியாறு, தமிழர் உரிமைகள், மத்திய அரசு தமிழர்களுக்கு செய்யும் துரோகம், மத்திய மாநில அரசுகளில் மலையாளிகளின் ஆதிக்கம், தமிழர்களின் பகுதிகள் கேரளாவிடம் பறி கொடுத்தமை, தமிழ்நாட்டில் அரசு துறை, தொழில் துறை மற்றும் மேற்கு மண்டல காவல் துறையில் மலையாளிகளுக்கு ஆதரவான போக்கு ஆகியவை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

கோவை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பரப்புரை நடைபெற்று வருகிறது.

பெரியார் முழக்கம் 26012012 இதழ்

You may also like...