‘இராமன் பாலம்’ புரட்டைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “மணல் திட்டு இராமன் பாலமா? அது தேசிய சின்னமா” கண்டன ஆர்ப்பாட்டம் 7.4.2012 சனிக்கிமை மாலை 4 மணியளவில் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் செ.நாவாப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் சி.ஆசைத்தம்பி, திருமால், திருநாவுக்கரசு, பெ.கோவிந்தன், லோ.கோபி, சு.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ப.கண்ணன், பெரியார் தி.க. இல. சிலம்பன், ந. வெற்றிவேல், ந. அய்யனார், விடுதலை சிறுத்தை ஆ.இராமலிங்கம், வி.வி.மு. பெரியார் வெங்கட் ஆகியோர் உரையை தொடர்ந்து, நங்கவள்ளி அன்பு கண்டன உரை நிகழ்த்தினார். ச.கா. இளையராசா, கு.க. சாக்ரடீசு, விழுப்புரம் மா.கணேசன், சங்கர் உள்பட பல பகுதிகளி லிருந்தும் ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத் தில் இராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.

 

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...