மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் தொடர் மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசின் சதியே! மத்திய அரசே, நெய்வேலி மின்சாரம் முழுமையும் தமிழ்நாட்டுக்கே வழங்கு! மின்சாரம் வேண்டும்; ஆனால் மக்களை கொல்லும் அணு மின்சாரம் வேண்டாம்! கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்காதே! என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19.3.2012 திங்கள் மாலை 5 மணிக்கு மேட்டூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டத் திற்கு கழக மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ் வுரிமை கட்சி ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர் களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் நங்க வள்ளி அன்பு, தமிழக வாழ் வுரிமை கட்சி அமைப்பாளர் வைத்தியர் மணி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலாளர் வெ.சிவராமன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கழக மேட்டூர் நகரத் தலைவர் பாஸ்கர் நன்றி கூறினார். முன்னதாக மேட்டூர் மாதா கோவில் அருகில் கண்டன ஊர்வலம் தொடங்கி, சின்ன பார்க், தினசரி அங்காடி, காந்தி சிலை, பேருந்து நிலையம் வழியாக தலைமை தபால் நிலையத்தை ஊர்வலம் வந்து சேர்ந்தது.

ஊர்வலத்தில் அணுஉலைக்கு எதிராகவும், மத்திய அரசின் தமிழின விரோத போக்கைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக ஒலி முழக்கம் எழுப்பப் பட்டது. கோரிக்கைகளை விளக்கி ஏராளமான துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

பெரியார் படிப்பகம் திறப்பு

சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காவேரி கிராஸ் பகுதியில் பெரியார் படிப்பகம் திறப்பு  விழா, பொதுக் கூட்டம் 28.3.2012 புதன் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. படிப்பகம் திறப்பு விழா பொதுக் கூட்ட நிகழ்வுகளுக்கு மாவட்ட தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமை வகித்தார். காவேரி கிராஸ் பகுதி மகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் ரத்தினசாமி, ரகுநாதன் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பலத்த கரவொலிக்கிடையில் படிப்பகத்தை திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

படிப்பக திறப்பு விழாவில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறை முழக்கமும், பகுத்தறிவு இன எழுச்சி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் கோபி வேலுச்சாமி நகைச்சுவையுடன் பகுத்தறிவு கருத்துகளை எடுத் துரைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் படிப்பகங்களின் தேவை குறித்தும் பெரி யாரியலின் தேவைகள் குறித்தும் விளக்கமாக சிறப் புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சூரிய குமார், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப் பாளர்கள் சக்திவேல், டேவிட், வீரமணி, மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் விஜயகுமார், கிருட்டிணன் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர் களும் கலந்து கொண்டனர்.

கடந்த பெரியார் பிறந்த நாளில் புதிய கிளை காவேரி கிராஸ் பகுதியில் தொடங்கப்பட்டது.  குறைந்த அளவு தோழர்கள் இருந்தாலும் பெரியார் கொள்கையின் அவசியத்தை உணர்ந்த காரணத்தால் மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி வழிகாட்டு தலுடன் ஒரே மாதத்தில் காவேரி கிராஸ் பகுதியில் ஒரு படிப்பகத்தை கட்டி முடிக்கின்ற பணியினை நிறைவு செய்த காவேரி கிராஸ் பகுதி தோழர்கள் புதிய தோழர்களுக்கு வழிகாட்டிகள். காவேரி கிராஸ் பெரியார் படிப்பகத்தின் சுவர்களில் அம்பேத்கர் படங்களை கழக ஓவியர்கள் குமரப்பா, ஓவியர் தர்மராசு, அண்ணா துரை ஆகியோர் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மேட்டூர் நகர கழக சார்பாக பொறுப்பாளர்கள் பாஸ்கர், சம்பத்குமார் மற்றும் தோழர்கள் படிப்பக திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மாமிச உணவு வழங்கி, படிப்பக திறப்பு விழா நிகழ்வுகளுக்கு தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் கிராமப் பகுதியான இங்கு அமைந்துள்ள பெரியார் படிப்பகம் கட்ட பெரும் தொகை அம்மக்களிடையே நன்கொடையாகத் திரட்டப்பட்டது.

காவேரி கிராஸ் சுந்தரம் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.                            ட

பெரியார் முழக்கம் 24052012 இதழ்

You may also like...