அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு

சமஸ்கிருதப் பண்பாடு – தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை விளக்கிடும் அறிஞர்கள் கருத்து.

விவேகானந்தர் எதிர்ப்பு

“நான் என் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண் டிருக்கின்றேன். எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரண மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொது மக்களுடைய சொந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.”

(விவேகானந்தர் – இந்திய பிரசங்கங்கள் பக்கம் 183-84)

வள்ளலார் எதிர்ப்பு

வடலூர் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பொழுதுபோக்கையும் உண்டு பண்ணு கின்ற மொழி.”

(வள்ளலார் ஒருமைப்பாடு பக்கம் 284)

இப்படி எழுதிய வள்ளலார், “இத்தகைய ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் என் மனம் செல்லாமல், எளிய இனிய தமிழ் மொழியில் மனம் செல்லுமாறு பணித்தாயே” என்று மனமுருகி இறைவனைப் புகழ்கிறார்.

கால்டுவெல் எதிர்ப்பு

வடமொழி, தமிழ் முதலான பல மொழிகளில்  சிறந்த பயிற்சியும், புலமையும் உடைய டாக்டர் கால்டுவெல் தமிழ் மொழியின் சிறப்பைத் தம்முடைய ஆய்வு நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:

“தெலுங்கும், கன்னடமும், மலையாள மும், தத்தம் தனி நிலைகளை நிலைநாட் டுவது அறவே இயலாத அளவு, சமஸ் கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை நோக்கி, எதிர்நோக்கிப் பழகி விட்டன. ஆதலின் தன்னுடைய சமஸ்கிருத கலவை களைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு இப்பொழுது அரிதாம் என்பது உண்மை கன்னடத்திற்கு அதனினும்  அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றைக் காட்டிலும் அரிதாம். திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழி யாய் நிலை பெற்று விளங்கும் தமிழ் தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு, உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.”

(கால்டுவெல் -ஒப்பிலக்கணம் நூலில்)

முனைவர் அகத்தியலிங்கம் எதிர்ப்பு

உலகளாவிய தற்காலத்திய மொழி யியல் துறையில் பெரும் புலமை சான்றவரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அகத்தியலிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும், மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர் கொள்கை.

திராவிட மொழிகளில் தமிழ்மொழி யைப் பேசும் மக்கள், மிகப் பன்னெடுங் காலமாகவே தங்களுக்கெனச் சிறந்த தொரு இலக்கியப் பாரம்பரியத்தை உரு வாக்கி, அதனைக் கட்டிக்காத்து வந்துள்ள னர்.  மிகப் பழங்காலத்தே ஆரிய மொழி யான சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் தனக்குரிய தனிப் பண்புகளைப் பேணி வந்திருத்தலை அன்று முதல் இன்று வரையில் காண முடியும்.

(5ஆவது உலகத் தமிழ் மாநாட்டு மலர்க் கட்டுரை – தமிழும் உலக  மொழிகளும்)

பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...