அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது மோடியின் 2 ஆண்டு ஆட்சி

 

மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சியின்  “சாதனைகள்” தான் என்ன?

  • இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவை மே 28 மாலை புதுடில்லியில் ‘இந்தியா கேட்’

மைதானத்தில் திரையுலக நட்சத்திரங்களை  அழைத்து ஆடம்பரமாக கொண்டாடினார்கள்.

நட்சத்திரங்களைப் பார்க்க கூட்டம் கூடியது. இதே போன்ற வெற்றி விழா உ.பி. தேர்தலை

கவனத்தில் கொண்டு அலகாபாத்தில் ‘சர்தார் பட்டேல் கிசான் மகா சம்மேளனம்’ என்று

விவசாயிகள் விழாவாக கொண்டாடினார்கள். அமித்ஷா சிறப்பு விருந்தினர். குறைந்த

எண்ணிக்கையில் தான் கூட்டம் சேர்ந்தது. அமீத்ஷா விரக்தியானார். ஊடகங்களும்

பெரிதாக செய்தி போடவில்லை.

  • மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராளமயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்றாலும் பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறக்கும் இந்த கொள்கைகளில் இரு கட்சிகளுக்குள்ளும் வேறுபாடு இருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிய காங்கிரஸ் ஆட்சி,  அதற்குள்ளாகவே ‘மனித நேய’ முகத்தைக்காட்டும் வகையில், கிராமப்புற வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற வற்றைக் கொண்டு வந்தது மோடி ஆட்சி. ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களை மகிழ்விக்க நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு சேவை வரி

மசோதா ஆகியவற்றைக் கொண்டு வர முயன்று தோல்வி அடைந்துள்ளது.

  • மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும் ‘இந்து தேசிய’வாதமும் ஒன்றுக்கொன்று உதவி வருகின்றன. ஒரு பக்கம் அன்னிய மூலதனத்தை மட்டுமே இந்திய பொருளாதாரம் நம்பிக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு அரசு செலவிடுவது நாட்டின் ‘வளர்ச்சி’யை பாதிக்கும் என்று கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கையாளர்கள் கூக்குரலிடுகின்றனர். இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் ‘இந்துத்துவா’ கட்டமைக்கும் ‘தேசபக்தி’யையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும்

கேள்விக்குள்ளாக்கும்போது அவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படு கிறார்கள்.                                                                                                                                                                                                                       • முதலாளித்துவ நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சூழலில்

மோடி ‘மேக் இன் இந்தியா’ எனும் இந்தியாவில் முதலீடுகளை திரட்டும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதனால் இந்தியாவில் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை.

  • உலகில் பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக ‘இந்தியா’ இருப்பதாக

கூறிக் கொள்கிறார்கள். தனி நபர் வருவாய் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்களைக் காட்டுகிறார்கள். தனி நபர் வருவாய் தொடர்பான மீளாய்வுகள் இந்தியா ‘வளர்ச்சி’ அடைந்து  வருகிறது என்ற வாதத்தை பொய்யாக்கிவிட்டன. உண்மையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மக்களின் உணவுப் பொருள் பயன்பாடு அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனி நபர் உணவு தானியங்களைப் பயன்படுத்தும் வீதம்1990-1991ஆம் ஆண்டுகளில் இருந்ததை விட கடுமையாக சரிந்து விட்டது.

  • டாலர் மதிப்பீட்டில் ஏற்றுமதியும் கணிசமாக குறைந்துவிட்டது. உலகம் முழுதும் பெட்ரோல், டீசல், எண்ணெய் விலை சரிவு ஏற்பட்ட சூழலிலும் இந்திய பொருளாதாரம் மூச்சு திணறி நிற்கிறது.
  • நாடு முழுதும் ‘ஒற்றைக் கலாச்சாரத்தை’ சங்பரிவார் கும்பலின் ஆதரவோடு திணிக்கும்

திட்டங்களை தீவிரப்படுத்துகிறது மோடி ஆட்சி. பல மாநிலங்களில் மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுக் கறியை சாப்பிட்டாலோ வீட்டில் வைத்திருந்தாலோ குற்றம் என்று  சட்டங்கள் வந்துவிட்டன. (தாத்ரியில் அத்லாக் என்ற முஸ்லிம் வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி அடித்தே கொல்லப்பட்டார்)

  • ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று முழக்கமிட மறுப்பவர்களை தேச விரோதிகள் என்று

முத்திரை குத்துகிறார்கள்.

  • பாகிஸ்தானியரோடு நட்பு பாராட்டினால் முகத்தில் கறுப்பு சாயம் பூசுகிறார்கள். சுசீந்திரா

குல்கர்னி என்ற ஆய்வு மய்யம் ஒன்றின் தலைவர் முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர்

குர்ஷித் முகமது கசூரி என்பவருடன் அவரதுநூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்து மதவெறியர்கள் குல்கர்னி முகத்தில்

கருப்பு சாயம் பூசினர்.

  • பகுத்தறிவு கருத்துகளை பரப்பியதற்காக தபோல்கர், பன்சாய் ஆகியோரும் சிலை

வழிபாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கல்புர்கியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  • காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகவும் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்சல்குரு

நினைவு நாளை நடத்தியதற்காகவும் கன்யாகுமார் உள்ளிட்ட மாணவர்களை தேச விரோத சட்டத்தில் கைது செய்ததோடு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையே சட்ட விரோதிகளின் கூடாரமாக அறிவித்து விட்டார்கள்.

  • ‘அகில பாரத் வித்யார்த்தி பரிஷத்’ என்ற மதவெறி மாணவர் அமைப்பை எதிர்த்தால்

பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடரமுடியாது. சங்பரிவார் கும்பல் உள்ளே புகுந்து

தாக்குதல் நடத்தும். இப்படி எதிர்ப்பு தெரிவித்ததற்காக அய்தராபாத் மத்திய

பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பட்டப் பிரிவில் படித்த தலித் மாணவர் ரோகித் வெமுலா  தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.

  • ஆர்.எஸ்.எஸ். சீருடையில் நாட்டில் உள்ள அனைவரும் பேண்ட் வாத்திய முழக்கங்களோடு அணி வகுத்தாக வேண்டும். அதுதான் தேச பக்தி என்ற எல்லைக்கு பேசக் கிளம்பி விட்டார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி இஸ்லாமியர்களை பீகார்  பொதுக் கூட்டத்தில் இழிவுபடுத்துகிறார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘இந்தியாவில்  ஒருவர் வாழ வேண்டுமானால் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக  மிரட்டுகிறார்; சட்டம் வேடிக்கை பார்க்கிறது.
  • அரசு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

‘இந்திய வரலாற்று ஆராய்ச்சி மய்யம்’ என்ற அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான

பார்ப்பனர் ஒய். சுதர்சன்ராவ். தெலுங்கானாவில் காக்காத்தியா பல்கலைக் கழகத்தில்

வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்தவர். ‘ஜாதி அமைப்பு தேவை’ என்று நூல் எழுதியவர். இராமாயணம், மகாபாரதம் என்பவை புராணங்கள் அல்ல; வரலாறு என்பதை இளம் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் வரலாறுகள் மாற்றி எழுதப்பட வேண்டும்

என்பதை இலட்சியமாகக் கொண்டவர்.

  • இந்திய கலாச்சார உறவுகளுக்கான மய்யத்தின் (ICCR) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர்

லோகேஷ் சந்திரா. மோடியின் பக்தர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது

மோடியை கடவுள் அவதாரம் என்று பேசியவர், காந்தியைவிட உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டியவர். தனது ஆராய்ச்சி பட்டத்துக்கான ஆய்வை ஜனசங்கத் தலைவர்களான தீனதயாள் உபத்யாவுக்கும், விவேகானந்தருக்கும் காணிக்கையாக்கியவர்.

  • பூனேயில் உள்ள அரசு நிறுவனமான இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் கஜேந்திர சவுகான். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரத’ தொடரில் நடித்தவர் என்பதுதான் இவரது ‘தகுதி’. இந்த நியமனத்தை எதிர்த்து நிறுவனத்தின் மாணவர்கள் நீண்ட காலம் போராடினார்கள். ஆட்சி அசைந்துகொடுக்கவில்லை. இந்த நிறுவனத்துக்குள் இப்போது

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏராளமாக நுழைந்து விட்டார்கள்.

  • சிம்லாவில் உள்ள ‘இந்திய உயர்கல்வி ஆய்வு மய்யம்’ என்ற அரசு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் சந்திர கலாபாடியா என்ற ஆர்.எஸ்.எஸ். அம்மையார். இந்தப் பதவிக்கு தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியலில் இவரது பெயரே இடம்

பெற வில்லை. மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். புகழ்பெற்ற ஆய்வாளர் கோபால கிருஷ்ண காந்தி போன்றவர்கள்

வகித்த பதவி இது.

  • அய்.அய்.டி.யின் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலரும் பார்ப்பனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான். மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரடி தலையீட்டில் அனைத்து நியமனங்களும் நடந்தன. ரோப்பர், புவனேசுவர்,

பாட்னா, அய்அய்.டி. தலைவர் பதவிகளுக்கு தேர்வுக் குழு முறைப்படி 37 பேர் கொண்ட

பெயர்ப் பட்டியலை அரசுக்கு அனுப்பியது. பட்டியலை குப்பைக் கூடையில் வீசி விட்டு, நேரடியாக ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர்களை நியமித்தார் அமைச்சர் ஸ்மிருதி

இரானி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அய்.அய்.டி. ஆளுகைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அணுசக்தி விஞ்ஞானி அனில் கடோட்கர் என்பவரும் புது டெல்லி அய்.அய்.டி. இயக்குனர் ரகுநாத் ஷெசோனிகர் என்பவரும் பதவி விலகினர்.

  • ‘அய்.அய்.எம்.’ என்ற இந்திய நிர்வாக அமைப்பின் சுயேச்சையான அதிகாரங்களை அமைச்சர் ஸ்மிருதி இரானி பறித்து, பாடத் திட்டம், கட்டண நிர்ணயம்அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுகளின் கீழ் கொண்டு வந்து விட்டார்.
  • கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்

(NCERT) இயக்குநராக இருந்த பர்வின் சிங்லர் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் கட்டாயப்

படுத்தி பதவி விலகச் செய்தனர். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாடுகளுக்கு பணிய மறுத்த விசுவபாரதி பல்கலைக் கழக துணை வேந்தர் சுஷாந்தா தத்தா குப்தா என்பவரும் கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதத்தைப் பெற்று, வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

  • ‘டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மய்ய’ இயக்குநர் பதவியிலிருந்த விஞ்ஞானி சந்தீப் திரிவேதி என்பவரை இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திடாத முறையிலே பிரதமர் அலுவலகம் பதவி நீக்கம் செய்தது.
  • ‘தேசிய நூல் அறக்கட்டளை’ என்ற அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் பல்தேவ் சர்மா. இவர் ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான “பஞ்ச ஜன்யா” பத்திரிகையின் ஆசிரியர்.
  • ‘பிரச்சார் பாரதி’ என்ற தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.சூர்ய பிரகாஷ். இவர் ஆர்.எஸ். எஸ். சிந்தனை மன்றமாக செயல்படும் ‘விவேகானந்தா சர்வதேச நிறுவனம்’ என்ற அமைப்பில் செயல்பட்டவர்.
  • ‘சென்சார் போர்டு’ என்ற திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவர் நிகாலனி. தேர்தல்

பிரச்சாரத்தில் மோடி புகழ் பாடும் ‘ஹர்ஹர் மோடி’ முழக்கங்களை உருவாக்கியது இவர்தான். பதவிக்கு வந்தவுடன் திரைப்படங்களில் பயன்படுத்தக்கூடாத ‘வார்த்தைகள்’ என்று ஒரு தடைப்பட்டியலையே மத கண்ணோட்டத்தில் தயாரித்தார்.

  • காசி இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரீஷ் சந்திரா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தேர்வு செய்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி

கிரிஷ் மால்வியா. இவர் இந்து மகாசபையை நிறுவிய பார்ப்பனர்

மதன் மோகன் மாளவியாவின்  பேரன். வாரணாசியில் போட்டி யிட்ட மோடியின் வேட்பாளர் மனு வில் மோடியை முன்மொழிந்தவர்.

  • குஜராத் படுகொலை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ‘இந்துத்துவா’கும்பல் மீதான வழக்குகளை ஆட்சி திரும்பப் பெற்று வருகிறது.
  • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேர்ந்து பணியாற்றுவதில் தடையேதும் இல்லை என்று அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்

திணிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சி அதிகாரத்தைப் பயன்

படுத்தி அரசு நிறுவனங்களை இந்து மயமாக்கியதன் ஒரு தொகுப்பு இது. மேலும் பல செய்திகள் அடுத்த இதழில்.

தொகுப்பு : இராசேந்திரன்

பெரியார் முழக்கம் 16062016 இதழ்

You may also like...