பகுத்தறிவாளர்கள் கொலை: புலன் விசாரணை தாமதப்படுத்துவது ஏன்?

பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆண்டுகள் பல ஓடியும் இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மூன்று கொலைகளிலும், ஒரே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக மும்பை தடயவியல் சோதனை அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இது உண்மை தானா என்பதை உறுதி செய்வதற்கு மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) இலண்டனில் உள்ள ‘ஸ்காட்லாண்ட் யார்ட்’ புலனாய்வு அமைப்பின் உதவியை நாடியிருக்கிறது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் இதர தடயவியல் சான்றாதாரங்களை ஸ்காட்லாந்து நாட்டின் உளவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கருநாடக காவல்துறையும் தடயவியல் நிறுவனமும் வேறு ஒரு கருத்தை முன்

வைத்திருக்கின்றன. கருநாடக பகுத்தறிவாளர் பன்சாராவை சுடுவதற்கு இரண்டு நாட்டு

துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு துப்பாக்கிகளில் ஒன்று தபோல்கரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருநாடக அரசின் புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன. இந்த மூன்று கொலைகளுக்கு திட்டமிட்டவர்களும் கொலையை செய்து முடித்தவர்களும் ஒரே கும்பலைச் சார்ந்தவர்கள்தான் என்று சி.பி.அய். வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன. குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதுதான் கேள்வி. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 13) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

You may also like...