பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

உணர்ச்சிகளால் உந்தப் படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரித லோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.

“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண் களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங் களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமை யாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காத லாகும்!”      – குடிஅரசு 21.7.45

“திடீரென்று காதல் கொள் வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக் காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல் வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம்.”  – விடுதலை 24.5.47

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொரு வர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.”

– விடுதலை 24.5.47

“திருமணம் அல்லது கல்யாணம், கன்னிகாதானம் இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மக்களாகிய நமக்குக் கிடையாது. நம்மவர்களுக்கெல்லாம் மண வாழ்க்கை இல்லை; காதல் வாழ்க்கைத்தான் இருந்தது.”

– விடுதலை 12.2.68

பெரியார் முழக்கம் 13022014 இதழ்

You may also like...