Author: admin

0

தலைமை அறிக்கை

அன்பு தோழருக்கு, வணக்கம் எதிர்வரும் 19.07.2015 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், செயல்திட்டங்கள், கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்  மேலும், அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு, எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தில் பகுதி /ஒன்றிய, கிளைக் கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது, எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம் தலைமை கழகம்

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...