Tagged: விருதுநகர் திவிக

விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் 25042017

விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் தோழர் கொளத்தூ மணி அவர்கள்  தலைமையில் 25042017 அன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையிலும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் கழக தலைவரால் அறிவிக்கப்பட்டது தோழர் அல்லப்பட்டி பாண்டி, மாவட்ட தலைவர் தோழர் ப.வினோத், மாவட்ட செயலாளர் தோழர் பொறிஞர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் தோழர் பெ. இராமநாதன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர், தோழர் செயக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், செய்தி தோழர் பன்னீர்செல்வம் சூலூர்

விருதுநகரில் பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி, டார்வின்தாசன், புதிய தமிழகம் மாநில மாணவரணி செயலாளர் குட்டிஜெகன், தமிழ்புலிகள் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கலைவேந்தன் ஆகியோரின் உரைக்குபின் தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் பூ.சந்திரபோஸ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் 01102016

விருதுநகரில், திராவிடர் விடுதலைக் கழகம் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 01.10.2016, மாலை 5 மணி இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில்,விருதுநகர் . சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் . தோழர் பூ.சந்திரபோஸ், தியாகி இம்மானுவேல் பேரவை. மந்திரமா? தந்திரமா? – தோழர் துரை.தாமோதரன். விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல்மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி,டார்வின்தாசன்,புதிய தமிழகம் மாநில மாணவரணி...

எழுச்சியுடன் உருவாகும் விருதுநகர் மாவட்ட திவிக

விருதுநகர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக அறிமுக பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றோடு மாவட்ட பொறுப்பாளர்கள்  நியமித்தல் என்பதற்கேற்ப கழக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி ஆர்வமுடன் மக்களை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்னெடுத்தார்கள். எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம் இந்த தலைமுறைக்கு வேலை வேண்டும் என்ற பரப்புரை துண்டறிக்கையை வைத்து இன்று நிதி திரட்டினார்கள். மேலும் அடுத்த கட்டமாக “நம்பங்க அறிவியல, நம்பாதிங்க சாமியார்கள” என்ற அறிவியல் பரப்புரை பயண துண்டறிக்கையை கொண்டு அடுத்த கட்ட பரப்புரை நிதி சேர்த்து எழச்சியுடன் மாவட்ட திவிக கட்டமைக்க உறுதியேற்றுள்ளார்கள். தோழர்கள்  செயக்குமார், செந்தில், சுந்தர் மற்றும் கணேசமூர்த்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள்