Tagged: வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர். அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள்...

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 12082017

ஆகஸ்ட் 12 திருச்செங்கோட்டில்… திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும், ‘சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம். சமூகநீதி காக்க தோழர்களின் பேராதவை எதிர்நோக்கி… -வைரவேல் மாரியப்பன் 97882-28962

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிப்பு – கு. அன்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வேபயணச்சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக்காப்பீடு மற்றும் பொதுத்துறை வங்கிகளில்பணியாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர்கொள்கிறார்கள். டெல்லி அரசுகளின் கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில்இயங்கும்மத்தியஅரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புரிமை தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. இது சேவைத்துறைகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises) என்.எல்.சி (NLC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற் சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகிய தொழிற் சாலைகளில் இந்த நிலைதான். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின்...