Tagged: ரஜினி

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பா.ஜ.கவில் நமோ மோடி பஜனை பாடுவதை ஏற்க முடியாது.   – ஜஸ்வந்த் சிங் எவ்வளவு காலத்துக்குத்தான் ராம பஜனையே பாடிக் கொண்டிருப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா? எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெய லலிதாவை முதலமைச்சர் களாக்கியதே காங்கிரஸ் தான்.  – தங்கபாலு காங்கிரஸ் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புகள் வந்தபோதும்கூட காங்கிரஸ் அதை உதறிவிட்டு, இவர்களை முதல்வராக்கியதா சொல்ல வர்றீங்க… அப்படித் தானே…. பா.ஜ.க. கூட்டணியை நடிகர் ரஜினி ஆதரிப்பதாக வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.    – பா.ஜ.க. தலைவர்கள்    வற்புறுத்தல் ஆமாம்! ரஜினி ‘வாய்ஸ்’ கொடுத்தால்தான் மோடி அலை வீசுதுன்னு மக்களை நம்ப வைக்க முடியும் ! குஜராத்தில் மனிதமலத்தை எடுக்கும் தொழிலில் 13 லட்சம் பேர் ஈடுபட் டுள்ளார்கள்.  – கர்மோச்சி அந்தோலன் ஆய்வு மய்யம் தகவல்! சும்மா சொல்லக்கூடாது; மோடி எப்படி எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குறாரு, பாருங்க! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகள் தொடங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்...

மோடி: சிறப்பு வினா-விடை

மோடி: சிறப்பு வினா-விடை

ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடித்த குரங்கு மரணம். ரஜினி ரசிகர்கள் இறுதி மரியாதை.   – செய்தி அச்சச்சோ… முக்கிய சாவு ஆச்சே; மோடிக்கு சேதி சொல்லியாச்சா? அரசியல் நோக்கத்தோடு மோடியை நான் சந்திக்கவில்லை.      – நடிகர் விஜய் அது எங்களுக்கும் தெரியுமுங்க… ரசிகர் மன்றத்தை இவ்வளவு பலமா, எப்படி உருவாக்கினீங்கன்னு மோடி கிட்ட ஆலோசனை கேட்கத்தான், போயிருப்பீங்க… அப்படித்தானே? தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்தான் தமிழ்நாட் டுக்கும், நாடு முழுமைக்கும் வரவேண்டிய திட்டங் களை முடக்கினார்.    – ஈரோட்டில் மோடி யாருங்க, அந்தப் பெண்? பெண்கள் பிரச்சினை என்றாலே, மோடி எப்போதும் புதிர் போடுவதே வழக்கமாயிடுச்சு! மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும்.        – பீகார் பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் மோடிக்குத்தான் ‘விசா’ கிடைக்காது; மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சோனியாவும் ராகுலும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நாட்டை ஆள்கிறார்கள்.   – மோடி குற்றச்சாட்டு...