சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே! முதல்வர் வீடு முற்றுகை: 2000 பேர் கைது
தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வின் பினாமியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17.6.2017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர் களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாது காப்பு சட்டம், UAPA என அடக்கு முறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் தோழர்கள்...