Tagged: மூடநம்பிக்கை

நீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை

நீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை

‘இராசி எண்’ பார்க்கும் மூட நம்பிக்கை நீதித் துறைகளில் கொடி கட்டிப் பறப்பதை விளக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, தமிழ் நாளேடு ஒன்றில் விரிவான கட்டுரை  எழுதியுள்ளார். அதிலிருந்து… கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி தோற்று, இடதுசாரி கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. முந்தைய அமைச்சர்கள் பயன் படுத்திய வாகனங்களையே – புதிய அமைச்சர்களும் பயன்படுத்த முடிவெடுத்தனர். வாகனங்களை அணிவகுத்து  நிறுத்திய போது, அதில் 13ஆம் எண் உள்ள வாகனமே இல்லை. காரணம் 13 இராசியில்லாத எண் என்ற மூட நம்பிக்கை. ‘இராசியில்லாத எண்’ வேண்டாம் என்று நம்பிய பிறகும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ‘இராசி’ இல்லாமல் போய்விட்டதே! இப்போது நிதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த  அமைச்சர் தாமஸ் அய்சக் தன்னுடைய வாகனத்துக்கு 13  என்ற எண்ணைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். அமைச்சரைப் பாராட்ட வேண்டும். கேரளாவில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைகளுக்குக்கூட ‘13’...

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ‘பிசிசிசி’...

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் – கொளத்தூர் மணி வேண்டுகோள்

//ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் நடைபெற்ற, பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்தும், தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் உரை குறித்தும் இன்றைய “தமிழ் இந்து” நாளிதழில் வந்துள்ள செய்தி//

தங்கப் புதையல்: சில கேள்விகள்

தங்கப் புதையல்: சில கேள்விகள்

உ.பி. மாநிலம் உள்ளாவ் பகுதியில் 1857 இல் சிற்றரசர் ராஜாராவ் ராம் பச்சன் – 1000 டன் தங்கத்தைப் “புதைத்த”போது 31 கிராம் தங்கத்தின் விலை 20 டாலர். ரூபாய்க்கும் அதே மதிப்புதான். ஒரு குறுநிலப் பகுதியின் சிற்றரசர் இந்த விலையில் ஆயிரம் டன் தங்கத்தை எப்படி வைத்திருந்தார்? அப்படியே வைத்திருந்தாலும் அவ்வளவு பெரும் தொகை அவரிடம் இருந்திருக்குமா? அப்படியே நிதி வசதி இருந்தாலும் அவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை அவரால் எங்கிருந்து பெற முடிந்தது? நாட்டின் வரலாற்று தொன்மங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நடத்த வேண்டிய தொல்பொருள் துறை, மூடநம்பிக்கைகளுக்கு துணை போகலாமா? பெரியார் முழக்கம் 23102013 இதழ்  

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

இ°ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் – ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவும்போதும் திருப்பதி ஏழுமலையான் ஆசி பெறுகிறார் இ°ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று இ°ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐ.ஏ.என்.எ°. செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.   அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இதுவரை செவ்வாய்கிழமையன்று ஒரு ஏவுகணைகூட ஏவப்பட்ட தில்லை. அது ஒரு ராசியில்லா நாள் என்பதுதான் காரணமாகும். செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன்ஆராய்ச்சி செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இ°ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி தான் செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். விண்வெளிக்கலம் 12அய் ஏவிய பிறகு, 13 அய் தவிர்த்துவிட்டு, 14 அய் ஏவியது ஏன்? 13 ராசியில்லாத...

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்